சென்னை தலைமைச் செயலகம் முன்பு மனைவி 2 குழந்தைகளுடன், தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ஓட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதில் ஜெயகுமார் என்பவரின் வீடு இடிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர், மனைவி மற்றும் குடும்பத்துடன் தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அவரை தடுத்த காவல்துறையினர், கைது செய்து பூக்கடை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் குடும்பத்துடன் ஒருவர் தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுதியுள்ளது.