பெரம்பலூர்: இன்று காலை பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் ப.சிவகாமி, குன்னம் சட்ட மன்ற வேட்பாளர் த.துரைராஜ், அரியலூர் வேட்பாளர் சிவசங்கர், ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர் காங்கிரஸ் தொகுதி ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து இன்று பெரம்பலூர் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வாக்களித்து திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக தலைவர் கேட்டுக் கொண்டார். கட்சி பிரமுகர்கள் அமைச்சர் ஆ.இராசா, முன்னாள் எம்.எல்.ஏக்கள், தேவராஜ், ராஜ்குமார், மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் கடைவீதி, கனரா வங்கி பகுதியில் இருந்து காமராஜர் வளைவு வரை மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர்.
தள்ளாத வயதிலும், தன்னார்வத்துடன் பிரச்சாரத்திற்கு வந்த தலைவர் கருணாநிதியின் பேட்சை கேட்க பொதுமக்களும், ஆதரவாளர்களும் பெரும் திரளாக திரண்டு இருந்தனர். கட்சியினர் பிரச்சாரா வாகனத்திற்கான பாதை ஒழுங்கமைவு செய்யாததால் கருணாநிதி சுமார் 5 நிமிடமமட மட்டுமே உரை நிகழ்த்தினார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தள்ளாத வயதிலும் ஒரு தலைவர் பிரச்சாரத்திற்கு வருவது ஆச்சரியப்பட வேண்டிய விசயம். அதிலும், முதுமையிலும் பேச தயாராக இருந்தார்.
கட்சியனரும், காவல் துறையும் முறையாக கூட்ட்தை கட்டுப்படுத்தி பிரச்சார வாகனத்திற்கு கயிறு கட்டி வழி செய்து கொடுத்து இருந்தால் அருமையாக உரை நிகழ்த்தி இருப்பார்.