பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியத்தை சேர்ந்தவர் வரதராஜன் மனைவி நிர்மலா. இவருக்கு சொந்தமாக உள்ள சுமார் 13 ஏக்கர் நிலம் ஊருக்கு அருகே உள்ளது.
இந்த நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து அதில் கரும்பு சாகுபடி செய்திருந்தார், மேலும் அந்த வயலில் தென்னை மரங்கள் சப்போட்டா உள்ளிட்ட பழமரங்களும் இருந்தன.
இந்நிலையில் இன்று அந்த வயலில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ மள மளவென பரவி வயலில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பாசனத்திற்கு போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன கருவிகள் மற்றும் வயலில் இருந்த 20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், சப்போட்டா மரங்களும் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் பெரம்பலூர் தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பராவாமல் அனைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீவிபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர்பாசன கருவிகள், கரும்பு,தென்னை மற்றும் சப்போட்டா மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.