பெரம்பலூர் ஆட்சியர் க..நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2016-2017-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணைய தள முகவரியான www.scholarships.gov.in , என்பதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு 31.10.2016 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 2,279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2016-2017-ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள் பின்வருமாறு:-
மாணவ – மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
பெற்றோர் – பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
www.scholarships.gov.in என்ற புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவ – மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், வருவாய்துறையிடமிருந்து பெற்ற மதத்திற்கான சான்று மற்றும் மற்றும் வருமான சான்றிதழ் அல்லது சுயசான்றொப்பம், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31.10.2016-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்புதல் வேண்டும். சிறுபான்மையின மாணவ – மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைய வேண்டும், என தெரிவித்துள்ளார்.