
Free training in Namakkal for poultry farming
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 24ம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் நாட்டுக்கோழி ரகங்கள், தீவன மற்றும் நோய் மேலாண்மை, அடை முட்டை பாதுகாக்கும் முறைகள் இளங்குஞ்சுகள் பராமரிப்பு குடற்புழுநீக்கம் மற்றும் தடுப்பூசி அட்டவணை, மூலிகை மருத்துவம் மற்றும் மரபுசாரா தீவனங்கள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வருகிற 23ம் தேதிக்குள் பெயரை கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுடணீமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு வேளாண் அறிவியில் நிலையத் தலைவர் டாக்டர் அகிலா தெரிவித்துள்ளார்.