தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தென்சென்னை மக்களவை உறுப்பினர் ஜெயவர்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தின்போது பேசிய அவர், நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார். சேலம் உருக்காலையை தனியார்மயம் படுத்தக்கூடாது என்று கூறிய அவர், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மீனவர் பிரச்சனையை தீர்க்க கட்சத் தீவை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டா