தமிழகத்தில் உள்ள பழைய சாலைகளை சீரமைக்கவேண்டும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் யுவராஜ் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை வழிச்சாலை அமைப்பதை விட தமிழகத்தில் உள்ள பழைய சாலைகளை செப்பணிட வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே தாம்பரம்- திண்டிவனம், வானகரம் -வாலஜா, மதுரவாயல் -தடா போன்ற சாலைகளில் தனியார் சுங்கவரி வசூலித்து கொள்ளை அடிப்பதை போன்றுதான் 8 வழிச்சாலையிலும் மக்களிடம் வழிப்பறி நடைபெற உள்ளது என தெரிவித்தார். தாங்கள் வாகனங்களுக்கான 18 ஆயிரத்து 400 கோடி ரூபாயை முன் கூட்டியே வரி செலுத்தி விட்டுத்தான் தாங்கள் கோரிக்கைகளை வைப்பதாகவும் யுவராஜ்கூறினார். 10 ஆண்டுகளாக எந்த ஒப்பந்த தாரரும் இல்லாமல் அகலப்படுத்தும் வேலைகள் மேற்குறிப்பிட்ட 3 சாலைகளிலும் நடைபெற வில்லை என்றும் அங்க வசூல் கொள்ளை மட்டுமே நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தாம் குறிப்பிட்ட 3 சாலைகளையும் 6 மற்றும் 8 வழிச்சாலைகளாக மாற்றியமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பலனாக இருக்கும் என்றும் கூறிய யுவராஜ் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கான அவகாசம் என்பதால் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.