பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஒரு மாதத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், கடைமடை பகுதியில் உள்ள திருவைகுண்டம், மருதூர் பகுதி விவசாயிகள் குடிநீர் மற்றும் சாகுபடிக்காக நீர்திறக்க வேண்டும் என முதலமைசரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.