இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பேற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை திரும்பிய பள்ளி மாணவர் பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா தனது 12-ம் வயதில் இத்தாலியில் நடைபெற்ற உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பேற்று கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார் ஏற்கனவே கடந்த 1990 –ம் ஆண்டு உக்ரைன் நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் சேர்ஜே கர்ஜக்கின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று உலகின் இளம் வயது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் முன்னனி செஸ் வீரர் விஷ்வநாதன் ஆனந்துடன் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 10வது வயதில் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.