பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா கூட்டணி ஆட்சியை பிடித்து உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,
பிரதமர் மோடி ஆணவத்தை கைவிட்டால் அவருக்கும் நாட்டிற்கும் நல்லது. பாரதீய ஜனதா மீதான கோபத்தை மக்கள் வெளிபடுத்தி உள்ளனர். மத்திய அரசு வெறுப்புணர்ச்சியை கைவிட்டு வளர்ச்சி மீதான பணியை தொடங்க வேண்டும். பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு செல்லாமல் விவசாயிகள் இளைஞர்களை நோக்கி செல்ல வேண்டும்.
இந்து முஸ்லிம் இடையே விரோதத்தை ஏற்படுத்திவிட்டு வெற்றிபெற முடியாது. மோடி. ஆர்.ஆர்.எஸ். பா.ஜ.க வால் இந்தியாவை பிளவு படுத்த முடியாது. அன்பு, வளர்ச்சி, ஒற்றுமையே அவசியம் என மக்கள் உணர்த்தி உள்ளனர். பீகாரின் வளர்ச்சிக்காக நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் எப்போதம் துணை நிற்கும்.
பீகார் மாநிலத்தில் விரைவில் அமைய உள்ள புதிய அரசில், காங்கிரஸ் பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, இதற்கான பதிலை, பொதுவிடத்தில் தெரிவிக்க முடியாது. இது ஆலோசித்து முடிவு எடுக்ப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.