பெண்கள் கார் ஓட்டும் விழிப்புணர்வு பேரணி, 17வது ஆண்டாக, வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. பெண்களுக்கான 17வது கார் பேரணி, ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு, தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. Duchess all women car rallyயில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதேபோல், இந்த ஆண்டு விழிப்புணர்வு வாசகமாக, “ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்” என்று வலியுறத்தப்பட உள்ளது.இந்த பேரணியில், 50 முதல் 60 கிலோமீட்டர் வரை பயணம் செய்யவும், சுமார் 100 கார்களுக்கு மேல் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காரிலும், நான்கு பெண்கள் கொண்ட குழு கலந்துக்கொள்ளும் என்றும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நீனா ரெட்டி தெரிவித்தார்.