பெரம்பலூர் மாவட்ட அமைப்புச்சார மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையம் ஆத்தூர் சாலையிலுள்ள சங்க அலுவகத்தில் முடிவடைந்தது.
பேரணியில் உழைப்பாளர்களின் நலன் காத்திட அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கொடி பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர்.