தஞ்சை அருகே நேற்று கடத்தப்பட்ட நபர் பெரம்பலூர் அருகே கழுத்து அறுத்து கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அறிவழகன்(38), இவர் நேற்று திடீரென காணாமல் போனதாக பேராவூரணி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தார் புகார் கொடுத்திருந்தனர்.
புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அறிவழகனை தேடி வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் ஊராட்சியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றின் பின் பகுதியில் முட்புதரில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக இன்று மாலை 4 மணியளவில் போலீசுக்கு தகவல் கிடத்தது.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அறிவழகனை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தமிழக மக்கள் முன்னேற்ற கழத்தின் பெரம்பலூர்
மாவட்ட நிர்வாகி அழகரி(33) என்பவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை குறித்து காவலவிசாரணல் துறையினர் தீவிர நடத்தி வருகின்றனர்.