மங்களமேடு அருகே பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, தாக்கி காயப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் மனைவி சுமதி(38), மற்றும் கண்ணுசாமி மகன் பெரியசாமி(29). இவர்கள் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சுமதி ஊருக்கு அருகாமையில் தனியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த பெரியசாமி, சுமதியை தகாத வார்த்தையில் திட்டி கை மற்றும் காலணியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சுமதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் பேரில் எஸ்.ஐ.,பாலசுந்தரம் வழக்கு பதிந்து பெரியசாமியை கைது செய்து சிறையிலடைத்தார்.