மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற க. பாவேந்தன்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க. பாவேந்தன் சனிக்கிழமை இன்று பொறுப்பேற்றார்.
பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த சி. சீனிவாசன் ஈரோடு மாவட்டத்துக்கும்,
பெரம்பலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த க. பாவேந்தன் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி, பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற க. பாவேந்தனிடம், ச. சீனிவாசன் சனிக்கிழமை பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து, பொறுப்பேற்ற க. பாவேந்தனுக்கு அரசு அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.