பெரம்பலூர்: நடைபெறவுள்ள பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி (தனி) வேட்பாளராக வேப்பந்தட்டை தாலுகா காரியானூர் கி. ராஜேந்திரன் என்பவர் தேமுதிக சார்பில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.
எலக்ட்ரிக்கல் தொழில் செய்துவரும் இவருக்கு அகிலா என்ற மனைவியும் சபன்ராஜ், சாகுல்ராஜ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் 21.4.2016 அன்று காலை 11 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரை அருகே தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
பின்னர் எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது.
ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், மதிமுக மாநில பொறுப்பாளருமான கே.வரதராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர்கள் துரை.காமராஜ் (தேமுதிக), துரைராஜ் (மதிமுக) , தமிழ்மாணிக்கம் (வி.சி.க) , ஞானசேகரன் (சிபிஐ), சிபிஎம் மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, தமாகா மாவட்ட தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் வேட்பாளர் கி.ராஜேந்திரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தோழமைக் கட்சியினர் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
சிபிஎம் வட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் சிஐடியு கணேசன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி ஒன்றிய, நகர செயலாளர்கள் மகளிரணி பொறுப்பாளர்கள் செய்தித் தொடர்பாளர்கள், கிளை செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் பெரும் திராளாக கலந்து கொண்டனர்.