பெரம்பலூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வன் கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனாப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர், திருப்பெயர், ஆலம்பாடி, செஞ்சேரி உட்பட 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் பெரம்பலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் முன் வைத்த குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளை செயல்படுத்தி உள்ளதாகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.