பெரம்பலுவர் : பெரம்பலூரில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
பெரம்பலூரில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தி அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக அரசு ஆட்சி அமைந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கச்சத்தீவு மீட்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்துவார். மேலும் தொலைநோக்கு திட்டமான 2023 விசன் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
தொழில் முதலீடுகளைப் பெற்று தொழில் தொடங்கி அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதாக கருதி அதிமுகவினர் அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வேட்பாளர் தமிழ்ச்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் துணைசபாநாயகர் அருணாசலம், நகர செயலாளர் பூபதி, யூனியன் சேர்மன் ஜெயக்குமார், நகராட்சி தலைவர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், ராணி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், வக்கீல்குலோத்துங்கன், செல்வக்குமார், கார்த்திகேயன், ராஜேஸ்வரி, எசனை-கீழக்கரை பன்னீர் செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.