பொருத்துவதற்காக மடிக்கணினிகளில் சாப்ட்வேர் பொருத்தும் பணி நடைபெற்றது
அதன் விபரம் வருமாறு:
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் 141 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்துவதற்காக மடிக்கணினிகளில் சாப்ட்வேர் பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தில் இன்று நடைபெற்றது
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிகளில் 322 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 316 வாக்குச் சாவடி மையங்களும் ஆக மொத்தம் 638 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இதில் பெரம்பலூர் தொகுதியில் 30 வாக்குச் சாவடிகளும், குன்னம் தொகுதியில் 36 வாக்குச் சாவடிகளும் ஆகமொத்தம் 66 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றம் நிறைந்த அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் 106 வாக்குச் சாவடிகளுக்கு மடிக்கணினிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.
இதில் 17 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சவடி பட்டியலில் உள்ளவை.
அதேபோல, குன்னம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் 35 வாக்குச்சாவடிகளுக்கு மடிக்கணினிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இதில் 16 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சவடி பட்டியலில் உள்ளவையாகும்.
வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் இந்ந வாக்குச்சாவடிகளை தலைமைத் தேர்தல் ஆணையர், மாவட்ட தேர்தல் ஆணையர் ஆகியோர் அலுவலகங்களிலிருந்தே கண்காணிக்கலாம்.