பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன் சோலைமுத்து (எ) மனோகர் சடையன் (44), தையற் கலைஞர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார்.
அங்கு சொந்தமாக தையற்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் பணிபுரிந்த தொழிவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகறாரில் மனோகரின் கடை தீயால் எரிந்தாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு தைக்க வாங்கிய துணியை திருப்பி கொடுக்க முடியாததால் மலேசிய சிறையில் தண்டனைக்காக அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மனோகர், மனைவி, குழந்தைகள் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல் கவலைப்பட்டு வந்துள்ளனர். மலேசியாவில் இருந்து மனோகரின் மகன் அரவிந்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் மனோகர் உடல் நிலைய சரியில்லாமல் இருப்பதாவும், அவருடைய விலாசம் பரிசோதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரவிந்த், பெரியம்மா மகேஸவரியுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது தந்தையயை மீட்டுத் தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் (பொ), சப் – கலெக்டர் மதுசூதன ரெட்டியிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்ககை எடுப்பதாக தெரித்தார்.