அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான வழியில் அழைத்துச் செல்ல முயற்சித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி சார்பில், வழக்கறிஞர் மகாலிங்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சிங்கராஜா, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், முருகன், கருப்பசாமி ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசரானையை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.