ஸ்பாட் ஃபைன் எனப்படும் அபராதத்தை டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராத தொகையை பிடிப்பட்ட இடத்திலேயே ஸ்பாட் ஃபைன் என்ற முறையில் ரொக்கமாக வசூலித்து அதற்கான ரசிதை வழங்கி வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அன்மை காலமாக மோதல் சம்பவம் அதிகரித்து வந்தது. இதை தவிர்க்கும் நோக்கில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டண தொகையை பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் வங்கி சேவை, டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகள், பேடிஎம் மொபைல் செயலி போன்ற நடைமுறைகள் மூலம் வசூலிக்கும் புதிய முறையை சென்னை காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இருந்த இடத்திலிருந்தே அபராத கட்டனத்தை செலுத்த முடியும் என்று நிலையை சென்னை காவல்துறை உருவாக்கியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண், இனி போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் எங்காவது ரொக்கமாக பணம் வசூலித்தால் அது லஞ்சமாக கருதப்படும் என்றும் தெரிவித்தார் இதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இது ஒரு எளிய முறை என்றும் இன்று முதல் காவலர்கள் பொதுமக்களிடம் பணத்தை வாங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், பொதுமக்களும் காவல்துறையிடம் பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.