பிரதமர் மோடி மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார் . நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி . பிரதமர் மோடி தனது கருத்திற்கு வலுச் சேர்க்க மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைப்பதாக குற்றம்சாட்டினார். அதே நேரம் இந்திய மக்களின் மனதில், அன்பு, இரக்கத்தை விதைப்பதே நாட்டை கட்டமைக்க ஒரே வழி என்றும் அதனை காங்கிரஸ் செய்து வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்