Chief Minister, Deputy Chief Minister supported 98 percent of the AIADMK; Dinakaran’s dream does not help: Minister Thangamani
முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஆதரவாக 98 சதவீத அதிமுகவினர் உள்ளனர். எனவே டிடிவி தினகரனின் கனவு ஒருபோதும் பலிக்காது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமான முடிவு வரும் என்றும் அதன்பிறகு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் செல்வோம் என்றும் ஆர்.கே. நகர் எம்எல்ஏவும், அமமுக துணைப் பொதுச்செயலருமான டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரன் இது குறித்து எப்படி சொல்கிறார் என்பது தெரியவில்லை. அதிமுகவினரை பொருத்தவரையில் 98 சதவீதம் பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பக்கம் உள்ளனர். இந்த நிலையில் டிடிவி தினகரனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.