மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனொரு பகுதியாக, மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் கடுமையான மழைப்பொழிவு நீடிக்கிறது. மழைநீரின் படையெடுப்பு ஒருபுறமும், வெள்ளப்பெருக்கு மறுபுறமும் ஒரே நேரத்தில் தாக்குவதால் மும்பை சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களின் முகப்பு விளக்குகளை மறைக்கும் அளவிற்கு சாலைகளில் மழை நேர் தேங்கி நிற்பதால் ஓட்டுனர்கள் அவதி அடைந்துள்ளனர். ஆங்காங்கே போக்குவரத்து நெறிசல் ஏற்படுவதாலும், பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாலும் பயணிகள் பாதிக்கட்டுள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் மும்பை மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.