மன்னார்குடி வங்கிக் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மணப்பாறை மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் ஊழியரின் லாக்கரில் இருந்து 2 டம்மி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.அசேஷமில், மெர்க்கண்டைல் வங்கி கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மரியசெல்வம் என்பவர் மணப்பாறை வங்கிக் கிளையில் பணிபுரிந்தவர் ஆவார். இவரது வங்கி லாக்கரில் இருந்து 2 டம்மி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மணப்பாறை போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது கிளீசரின், ரத்தம் போன்ற திரவம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் ஏற்கெனவே இந்த வங்கியில் தான் கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் கூறிய நிலையில், இங்கு ஏன் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மரியசெல்வம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மணப்பாறை போலீசார், அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.