தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் கீழ் வயலப்பாடி ஊராட்சியில் நிலமற்ற ஏழை கூலி விவசாயிகள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் விலையில் ஒரு நபருக்கு 4 வெள்ளாடுகள் வீதம் மொத்தம் 400 ஆடுகள் அரியலூர் சந்தையில் வாங்கி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அத்தியூர் கால்நடை உதவி மருத்துவர் செல்வகுமார் தலைமை வகித்தார். வயலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணன், இளையராஜா கால்நடை பாராமரிப்பு உதவியாளர்கள் தனவேல், சின்னதுரை, கால்நடை ஆய்வாளர்கள் சித்ரா, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 400 ஆடுகளுக்கு ஒரு வருடத்திற்கு காப்பீடும் செய்து கொடுக்கப்பட்டது. ஆட்டு கொட்டகை அமைக்க ரூ 2000 ரூபாய் கொடுக்கப்பட உள்ளது.