பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பரிவில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 17 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேனல் சந்த்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 5 இரு சக்கர வாகனங்களும், 1 பொலிரோ ஜீப்பும், பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் டிச. 17ம் தேதி காலை 7.30 முதல் 10.30 மணி வரை ரூ. 5 ஆயிரம் முன் வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர், விலாசத்தை பெரம்பலூர் நான்கு சாலை செல்லும் வழியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பரிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
காலை 11 மணி முதல் பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுக்க விரும்புவோர் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை இதில் ஏதாவது ஒன்றை சமர்பித்து, பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வாகனத்தை ஏலம் எடுப்பவர்கள் ஏலத்தொகையுடன் 14.5 சதவீத விற்பனை வரித் தொகையுடன் செலுத்தி, வகனத்தை பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.