வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக உறுப்பினர் மா.சந்திரகாசி வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆலோசனை வழங்கியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி பேசியதாவது:
வெளிநாடுகளில் இந்திய தொழிலாளர்கள் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தார். குறிப்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம்(55) கடந்த 3மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற இவர் ரியாத் நகரில் தனது முதலாளியால் பட்டினிபோட்டு துன்புறுத்தப்பட்டதுடன், அதிகாரிகளிடம் முறையிட்டதனால் வலதுகையினை துண்டித்தார்.
இதனையறிந்து தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கையினால் கஸ்தூரி வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் 10லட்சரூபாய் நிதியினையும் வழங்கினார். இதுபோன்ற சொல்லெணா துயரங்களை தமிழகம் மற்று பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை வலியுறுத்தும் விதமாகவும், இதுபோன்ற இன்னல்கள் தமிழக மற்றும் பிறமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கும்வகையில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி விவாதத்தின்போது வலியுறுத்தி பேசியதாவது…
தமிழக தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்கஅளவு வெளிநாடுகளிகளில் பணிபுரிந்துவருவதாகவும், அவர்களின் நலன்குறித்து தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகுந்த கவலைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய நாட்டுக்கு பெருமளவு அந்நிய முதலீட்டை கொண்டுவருவதில் வெளிநாடுகளில் உள்ள இந்தியதொழிலாளர்கள் பெரும்பங்குவகிப்பதாகவும், ஆனால் அவர்கள் பணிபுரியும் சூழல், பணியின் தரம் ஆகியவை திருப்தியளிப்பதாக இல்லை. வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள் பலவேறுவிதமான சுரண்டல்களுக்கும், சிரமங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். குறிப்பாக சரியானவேலையின்மை, குறைந்த ஊதியம், அதிகவேலைப்பளு, மருத்துவசதியின்மை, தரமற்ற வசிப்பிடம், சித்ரவதைகள் மற்றும் தாக்குதலுக்குள்ளாகின்றனர். இவற்றை எதிர்த்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள் வேலையிழப்பு மற்றும் தண்டணைக்கு உள்ளாக்கப்படுவதும், சில சமயங்களில் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசா முடக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு வேதனைகளை வெளிநாடுகளில் பணிபுரியம் இந்தியத் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மரணமடையும் சூழலில் உடல் மற்றும் உடைமைகளைப் பெறுவதில் அவர்களது உறவினர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வெளிநாடுகளில் உளள இந்திய தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஆதரவுதேவை, வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளார்ளின் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், இந்திய தூதரங்கள் மூலம் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்திய தொழிலாளர்களுக்கு சரியான காப்பீடு வழங்க கட்டாயமாக்கவேண்டும், எனவே வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் உயிர், உடைமை மற்றும் கண்ணியத்தை காப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவேண்டும் என்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வலியுறுத்தினார்.