Kunnam: Cast your vote for the ‘Two Leaves’ symbol and ensure victory! My voice will resonate in the Legislative Assembly as your voice! — Candidate Saranya campaigns.

குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் ஐஜேகே சார்பில் வேட்பாளராக சரண்யா போட்டியிடுகிறார். நேற்று தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.கே ராஜேந்திரன் தலைமையில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் நல்லறிக்கை கிராம பொதுமக்களிடம் பேசியதாவது:

நல்லறிக்கை கிராம வாக்காளர் பெருமக்களுக்கு வணக்கம். என்னை வரவேற்ற தாய்மார்களுக்கும், மகளிர்களுக்கும் நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக, இரட்டை இலை சின்னத்தில் குன்னம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். அனைவரும் எனக்கு ஆதரவு தாருங்கள்.

உங்களுடைய கோரிக்கைள்: அனைத்து தெருக்களிலும் ரோடு வசதி செய்து தர வேண்டும்., நீர் தேக்கத் தொட்டி புதிதாக கட்டித் தர வேண்டும், கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். கழிவுநீர் கால்வாய் முழுவதும் சரி செய்ய வேண்டும்.பிள்ளையார் குளம் நீர் தூர்வாரி கம்பி வேலி அமைத்துத் தர வேண்டும். ஓடைகளைத் தூர்வாரி தடுப்பணை கட்டித் தர வேண்டும். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் உங்கள் குரலாக என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். அனைவரும் எனக்கு ஆதரவு தாருங்கள். நன்றி, வணக்கம்.” என பேசினார்.

பிரச்சாரத்தில், முன்னாள் துணை சபாநாயகர் ஆ.அருணாசலம், ஒன்றிய செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், காடூர் ஸ்டாலின், பாஜக மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், அமமுக கார்த்திகேயன், பாமக செந்தில்குமார், உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். வேட்பாளர் சரண்யா

சின்ன வெண்மணி, பெரிய வெண்மணி, கௌப்பாடி, கொத்தவாசல், புதுக்குடிசை, நல்லறிக்கை, துணிஞ்சப்பாடி, புதூர், வேட்டக்குடி, கோயில்பாளையம், தேனூர், அண்ணா நகர், துங்கபுரம், கிளியப்பட்டு, காரைப்பாடி, வீரம்மாநல்லூர், வ.கீரனூர், வயலப்பாடி, ஒலைப்பாடி, கல்லை, வேப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் காலை முதல் இரவு வரை கொளுத்தும் அனலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!