Perambalur: The DMK has implemented various development projects—including high-level bridges—that had long been pending demands; DMK candidate Jayalakshmi campaigns, seeking votes for the ‘Rising Sun’ symbol!

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பளாராக போட்டியிடும் ஜெயலட்சுமி மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரம்பலூர் – கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் குறுக்கே வெள்ளுவாடி – கொரக்கவாடி மேம்பாலம், திருவாலந்துறை – கீழக்கல்பூண்டி மேம்பாலம், பசும்பலூர் தாழ்ம்பூ ஓடை பாலம் என பசும்பலூர் மருத்துவனை, புதிய பேருந்துகள், புதிய வழிதடங்கள், மற்றும் திட்டக்குடி – சின்னசேலம் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்து, வழித்தடநீட்டிப்பு என போக்குவரத்துறையிலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம் என பல திட்டங்கள் கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2026 -ல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால், கலைஞர் மகளிர் உரிமை தொகை இனி மாதம் ரூ.2000/- வழங்கப்படும். மகளிருக்கு ரூ.8000/- மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டம் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோர்ந்த அரசு ஊழியருக்கு புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்படும். நெல் மற்றும் கரும்பு குவிண்டால் & டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.3500/- & ரூ.4500/- ஆக உயர்த்தப்படும். முதியோர், கைம்பெண் மற்றும் 50+ வயதுத் திருமணமாகாத மகளிருக்கு ஓய்யூதியம் ரூ.2,000 ஆக வழங்கப்படும். மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு. கலைஞரின் கனவு இல்லம், பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத விலையில்லா புதிய நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி. சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு பிணை ஏதுவுமின்றி ரூ.5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்குகளை சேகரித்தனர்.
பசும்பலூருக்கு வந்த வேட்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட கட்சியினருக்கு பசும்பலூர் கிளை செயலாளர் ஜெயபால் மற்றும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பசும்பலூரில் வீதி வீதியாக கோசமிட்டு வாக்குகளை சேகரித்தனர்.
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் வெண்பாவூர், பெரியவடகரை, பாண்டகப்பாடி, மாவிலிங்கை, அழகியபுரம், நெற்குணம், நூத்தப்பூர், பாளையம், சிறுநிலா, பாதங்கி, கைகளத்தூர், அய்யனார்பாளையம், காந்திநகர், பெருநிலா, பில்லாங்குளம், காரியனூர், வெள்ளுவாடி, சோலை நகர், பசும்பலூர், பிம்பலூர், அகரம், திருவாலந்துரை, ராம்ஜி நகர், மில்லத் நகர், வண்ணாரம் பூண்டி, களத்தூர், ராயப்பா நகர், மேட்டுச்சேரி, மறவநத்தம், மேட்டுமறவநத்தம், பேரையூர், தைக்கால், அயன் பேரையூர், பகுதிகளில் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், விசிக மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக வ.களத்தூருக்கு வாக்கு சேகரிக்க வந்த திமுக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு இஸ்லாமிய பெண்கள் சிறப்பு வரவற்பு அளித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன், தீவிர வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497