அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா நடுவலூர் கார்குடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது55). கரும்பு விவசாயி. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கோட்டூர் துகிலியில் இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்திருந்தார்.

கரும்பு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்துள்ளதை மதியழகன், சர்க்கலை ஆலையின் முதுநிலை பொதுமேலாளர் ஸ்டீபன் அருள், ஜெயங்கொண்டம் மண்டல மேலாளார் அன்புசெல்வன், ஸ்ரீபுரந்தான் கோட்ட அலுவலர் சங்கரமூர்த்தி ஆகியோருக்கு பலமுறை தெரிவித்தும், கரும்பை வெட்டும் உத்திரவை சர்க்கரை ஆலைநிர்வாகம் பிறப்பிக்கவில்லை. கரும்பு விளைந்து 14மாதங்களை கடந்ததால் சர்க்கரை சத்து குறைந்து 160 டன் கரும்புபயிர் சருகு போல காய்ந்தது. மேலும், மதியழகனால் மாற்று பயிர் சாகுபடி செய்யமுடிவில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கும், சிரமத்திற்கும் ஆளான மதியழகன் காலக்கெடுவிற்குள் கரும்பைவெட்டமுடியாமல் மேலும், மனவேதனைஅடைந்தார். சர்க்கரை ஆலை அதிகாரிகள் ஸ்டீபன்ராஜ், அன்புசெல்வன், சங்கரமூர்த்தி ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். வழக்கு நிறைவில் மனுதாரர் மதியழகனை மனஉளைச்சல் மற்றும் சிரமத்திற்கு ஆளாக்கியதால் ரூ.20ஆயிரம் இழப்பீட்டுத்தொகை, ரூ.5ஆயிரம் வழக்கு செலவுத்தொகை உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்தை 2 மாதத்திற்குள் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் 3 பேரும் சேர்ந்து 2 மாதத்திற்குள் மதியழகனுக்கு வழங்கவேண்டும். 2 மாதத்திற்கு மேல் காலம் கடத்தினால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து மதியழகனுக்கு வழங்கவேண்டும் என்று நேற்று முன்தினம் உத்திரவிட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!