perambalur_dt_map

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் இரண்டு இரவுக்காவலர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள ஒரு அலுவலக உதவியாளர் (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்) முன்னுரிமை பெற்றவர்கள் – ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் இரண்டு இரவு காவலர்கள் (1- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்) முன்னுரிமை பெற்றவர், 2- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ சீர்மரபினர் முன்னுரிமை பெற்றவர் – ஆண்கள் மட்டும்) பணியிடங்களை இனசுழற்சி முறையில் நிரப்பிட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 01.07.2015 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் மற்றும் 30 வயதுக்கு மிகாமலும், இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி பிரிவு அலுவலகத்திலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவலக நாட்களில் விண்ணப்பத்தினை பெற்று உரிய சான்றின் நகலுடன் இணைத்து வரும் 03.10.2015 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04328 – 225201 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!