Online quiz on Assembly elections: Public can participate in Collector Santha’s call

வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறவிருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பொது மக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில அளவிலான இணையவழி வினாடி-வினா போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் அனைத்து சுற்றுகளும் “Goal Quiz Sports” என்ற You Tube இணையவழி தளத்திலேயே நடத்தப்படும். இதில் பங்கேற்கும் ஆர்வமுள்ளவர்கள் நேரடியாகவே முதல்நிலை போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல்நிலை போட்டியின் முதல்சுற்று அக்.25 அன்று மாலை 4 மணிக்கும், இரண்டாம் சுற்று அக்.26.அன்று காலை 11 மணிக்கும், மூன்றாம் சுற்று அக்.26.1அன்று மாலை 4 மணிக்கும் நடைபெறும்.

Goal Quiz Sports” என்ற You Tube தளத்தில் கருத்துக்களை தெரிவிக்கும் (Comment Section) பகுதியில் சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே பின்வரும் சுற்றுகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலைப் பதிவிட வேண்டும். மொத்தம் 36 குழுக்கள் அரையிறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுகள் பின்வரும் வார இறுதியில் நடத்தப்படும். அரையிறுதி மறறும் இறுதி சுற்று குறித்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.

தேர்தல் மற்றும் பொது அறிவு (முறையே 50 சதவீதம்) சார்ந்து வினாடி-வினா போட்டிகள் நடைபெறும். ஓர் அணியில் அதிகபட்சமாக இரண்டு நபர்கள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். முதல்நிலை மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் சரியான பதில் அளிப்பவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் அவர்களை 96260 89581 என்கிற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!