பெரம்பலூர்: மத்திய சிறுபான்மை அமைச்சகம், புதுதில்லி மூலம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மகளிரின் தலைமைப் பண்பை மேம்படுத்தும் (அ) வளர்க்கும் நயி ரோஷிணி (Nai Roshini the scheme for Leadership Development of Minority Women) என்ற திட்டத்தின் கீழ் 2015-2016-ஆம் ஆண்டிற்கு விருப்பம் உள்ள அரசு (அ) அரசு சாரா பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை Online Application Management System (OAMS) என்ற மத்திய அரசின் சிறுபான்மை அமைச்சகத்தின் www.minorityaffairs.gov.in , என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும்.

கடந்த 2012-2013, 2013-2014 மற்றும் 2014-2015-ஆம் ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே திட்டங்களை செயல்படுத்தியவர்களும் மீண்டும் புதிதாக தற்பொழுது இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், இத்திட்டத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்பது குறித்து www.minorityaffairs.gov.in , என்ற சிறுபான்மையின அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம். இது குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 224475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!