19-8 mla

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்புடைய உதவி உபகரணங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் மாற்றுத் திறனாளிகளின் நலவாழ்விற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்கையில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மின்தூக்கி வசதியுடன் கூடிய படிக்கட்டுகள் முதன் முதலில் சென்னை பெருநகர பேருந்துகளில் அறிமுகப்படுத்தியவர், நமது தமிழக முதலமைச்சர் அவர்கள் தான். எனவே அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் அத்திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும் என்ற தன்னம்பிக்கை பெற்று வருகின்றனர் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 580 மதிப்புள்ள இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும், ரூ.5,ஆயிரத்து 350 மதிப்புள்ள இலவச மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டத்தில் 25 நபர்களுக்கும், ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 750 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டிகளையும், 10 நபர்களுக்கு ரூ49,000 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காளிகளையும், 3 நபர்களுக்கு ரூ.12,900 மதிப்புள்ள முடநீக்கு கருவிகளையும், 27 நபர்களுக்கு ரூ.11,825 மதிப்புள்ள ஊன்றுகோல்களையும், 22 நபர்களுக்கு ரூ.92,300 மதிப்பிலான செயற்கை அவயங்களையும், 06 நபர்களுக்கு ரூ.88 ஆயிரத்து 500 மதிப்பிலான நவீன செயற்கை அவயங்களும் என மொதத்தம் 95 நபர;களுக்கு ரூ4 லட்சத்து 99 ஆயிரத்து 855 மதிப்பிலான உதவி உபகரனங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத் துணைத்தலைவர் ஆர;.டி.ராமசந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன், முடநீக்கியியல் வல்லுனர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!