72 teachers and officers arrested in road blocking in Namakkal ; imprisoned Salem

நாமக்கல்லில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 72 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 4 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலாவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்களாக மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டன. கடந்த 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

கோர்ட் தடையை மீறி 25ம் தேதி நாமக்கல் பார்க் ரோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இரவு 7 மணியளவில் பெண்கள் மற்றும் சில ஆண்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அவர்கள் திருமண மண்டபம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 1 மணி வரைஅவர்கள் கலைந்து செல்லாமல் காத்திருந்தனர். இதனிடையே போராட்டத்தை முன் நின்று நடத்தியதாக சில சங்க நிர்வாகிகள் உட்பட 72 பேரை நள்ளிரவு 2-30 மணிக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பரமத்தி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற பிப்.1ம் தேதி வரை ரிமாண்ட் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இøத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!