மார்ச் 2016ல் நடைபெற உள்ள மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என முதன்மைக்கல்வி அலுவலரர் முனுசாமி தகவல் தெரவித்துள்ளார்

மார்ச் 2016ல் நடைபெற உள்ள மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேல்நிலைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விரும்பும் நபர்கள் H விண்ணப்பத்திலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் 01.03.2016 அன்று 16 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக HP விண்ணப்பத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் ஆண் தனித் தேர்வர்கள் பெரம்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளியிலும், பெண் தனித்தேர்வர்கள் பெரம்பலூர் புனித தொமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் உள்ள சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் 27.11.2015 அன்று மாலை 5.45 மணி வரை (சனி மற்றும் ஞாயிறுக் கிழமை தவிர்த்து) பதிவு செய்யலாம்.

மறுமுறை தேர்வு எழுதுபவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.50 வீதம் தேர்வுக்கட்டணமும் அதனுடன் ரூ.35 இதரக்கட்டணமும், ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.50ம் செலுத்த வேண்டும்.

நேரடித்தனித் தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.150 வீதம் தேர்வுக்கட்டணமும் அதனுடன் ரூ.35 இதரக்கட்டணமும், ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.50ம் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாக மேற்குறிப்பிட்ட சேவை மையத்தில் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வு கூட நுழைவுச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் ஒப்புகைச்சீட்டினை தனித் தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tndge.in , என்ற இணைய தளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!