பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் பெருமத்தூர் கிராமத்தில் 1285 நபர்கள் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவமுகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி இன்று துவக்கி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது : தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சுகாதாரத்துறையின் மூலம் மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும். தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நலத்தைப்பேணும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று பெருமத்தூரில் நடைபெறும் முகாமில் மகப்பேறுக்கென்றுதனிப்பிரிவு ஸ்கேன் மற்றும் இரத்தபரிசோதனைகள் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மகப்பேறு மருத்துவா;கள் கலந்துகொண்டுள்ளனர்.

குழந்தை சிகிச்சைக்குத் தனிப்பிரிவு, ஆண்கள மற்றும் பெண்கள் 40 வயதுக்குகீழ் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பிரித்து தனித்தனியாக சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மற்றும் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைமேற்கொள்ளப்படுகிறது. இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என பேசினார்.

இம்முகாமில் அரசு மருத்துவர்கள், தமிழகமுதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுதிட்டத்தின் கீழ் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி நிபுனர், அப்பல்லோ மருத்துவமனை இருதயஅறுவைசிகிச்சை நிபுனர், ப்ரண்ட்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பெரம்பலூர் தனலெட்சுமிசீனிவாசன் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில் மொத்தம் 1285 பேர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆண்கள் 532பேர்கள், பெண்கள் 590 பேர்கள் மற்றும் குழந்தைகள் 163பேர்கள் ஆவர்.

138 கர்ப்பினிபெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. 488 நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை,உப்பு இரத்தசோகை பரிசோதனையும், 510 நபர்களுக்கு சிறுநீர் பரிசோதனையும், 55 நபர்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும், 240 நபர்களுக்கு கண்புறை நோய் பரிசோதனையும், 310 நபர்களுக்கு சித்த மருத்துவசிகிச்சையும் வழங்கப்பட்டது.

12 நபர்களுக்கு உடனடியாக கண்புறை அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் உயர் சிகிச்சைக்காக தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெற 25 நோயாளிகளை உயர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சகுந்தலாகோவிந்தன், வேப்பூர் ஒன்றிய குழுத்தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, பள்ளி தாளாளர் சகாயராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கலைமணி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கொள்ளைநோய் தடுப்புஅலுவலர் மருத்துவர் அரவிந்த், ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் சின்ராசு, மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சிமன்றதலைவர் விஜயலெட்சுமி மாரிமுத்து, உதவிதிட்டமேலாளர் தினேஷ், பயிற்சி மருத்துவர் ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!