728x90t1
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.தரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர்மாவட்டம், மகளிர் திட்ட செயலாக்க அலகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டிற்கான தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 20 கிராம ஊராட்சிகளிலிருந்தும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், கணவனை பிரிந்து வாழ்பவர்கள் மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மூன்று வகையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சியில், வீட்டில் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பிரிவின் கீழ் பெனாயில் தயாரித்தல், கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்தல், சலவை பவுடர் தயாரித்தல், மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார பொருட்கள் தயாரித்தல், ஓம வாட்டர் தயாரித்தல், கிளீனிங் பவுடர் தயாரித்தல், லிக்யூட் புளு தயாரித்தல், பிளீச்சிங் பவுடர் தயாரித்தல், சோப் ஆயில் தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் போன்ற பயிற்சிகளும்,

மசாலா பொடி தயாரித்தல் பிரிவின் கீழ் சாம்பார் பவுடர், ரசப் பவுடர், ஐடில் பவுடர், கரிலீப் பவுடர், கார்லிக் பவுடர், பருப்பு பவுடர், ஜிஞ்சலி சாதா பவுடர், புளியோதரை பவுடர், லெமன் சாதம் பவுடர், சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, குருமா பவுடர், புளிக் குழம்பு பவுடர் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பிரிவின் கீழ் ஆடு வளா;ப்பு, கோழி வளா;ப்பு, கறவை மாடு வளா;ப்பு, மதிப்புக் கூட்டுப் பொருட்களில், காரட் மில்க், பீட்ரூட் மில்க், கோவா, மில்க் பேடு, ரசகுல்லா ஆகிய பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நகர்புறம் மற்றும் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 29.10.2015 அன்று மகளிர் திட்ட அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து தங்களது பெயர்களை பதிவு செய்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!