perambalur.kalaimalar.com_sports
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது ரொக்கப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், ஹாக்கி, கபாடி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 560 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

ஆண்களுக்கான தடகளப்போட்டியில் 100 மீ ஓட்டப்போட்டியில் சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவன் ஆர்.கேசவன்- முதலிடத்தையும், 800 மீ ஓட்டப்போட்டியில் கே.கார்த்திகேயன் முதலிடத்தையும், 5000 மீ ஓட்டப்போட்டியில் பெரம்பலூர் மாணவன் பி. விஜய்- முதலிடத்தையும், 110 மீ .தடை ஓட்டப்போட்டியில் கே. கதிரவன் (பெரம்பலூர்) முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் பி. தர்மதுரை (எளம்பலூர்) முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் இ. ஏழிலரசன்- தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் எம்.சுபாஷ் கண்ணன்-சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், மும்முறை தாண்டுதல் போட்டியில் பி. மேஷா (தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் எம்.விஜயகுமார் (பெரம்பலூர்) முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் வி.வெங்கடேசன் (தந்தை ரோவர் பொறியியல் கல்லூரி) முதலிடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான குழுப்போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டியில் கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், டென்னிஸ் போட்டியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஹாக்கி போட்டியில் தந்தை ரோவா; கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், இறகுப்பந்து போட்டியில் ஜிம்கானா பேட்மின்ட்டன் கிளப், பெரம்பலூர் முதலிடத்தையும், கபாடி போட்டியில் பாடாலூர் முதலிடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான தடகளப்போட்டியில் 100 மீ ஓட்டப்போட்டியில் ஒய்.ஆரோக்கியா எபிசியா டெல்சி- புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்போட்டியில் ஆர்.கீதா (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், 3000 மீ ஓட்டப்போட்டியில், ஆர்.கிருத்திகா (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், 100 மீ தடை ஓட்டப்போட்டியில் ஜே.மிஸ்பா அனித்தா (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும்,உயரம் தாண்டுதல் போட்டியில் என்.நாகப்பிரியா (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் பி.குகனேஷ்வரி ( புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் பி.பவதாரணி (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் அ.நிரோஷா (தந்தை ரோவர் பொறியியல் கல்லூரி) முதலிடத்தையும், மும்முறை தாண்டுதல் போட்டியில் வி.வினிஷா (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் ஜி.கீர்த்திகா-( குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான குழுப்போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டியில் (பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், கபாடியில் அரசு அரும்பாவூர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், இறகுப்பந்து போட்டியில் பெரம்பலூர் ஜிம்கானா பேட்மின்ட்டன் கிளப் முதலிடத்தையும், டென்னிஸ் போட்டியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஹாக்கி போட்டியில் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும் பெற்றனர்.

கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்றது. இதில், அன்று 960 ஆணகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான கையுந்துபந்து போட்டியில் எஸ்.ஆடுதுறை அரசுமேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கூடைப்பந்து போட்டியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கால்பந்து போட்டியில் , நீச்சல் போட்டியில் 50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் பி.பாலகிருஷ்ணன் (தந்தை ரோவர் கல்லூரி முதலிடத்தையும், 400 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் டி. மகேஷ்வரன் (பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், 200 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் ஆர்.கலைராஜ் (தேனூர்) முதலிடத்தையும் ,100 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் பி.ராம்குமார் (பெரம்பலூர்) முதலிடத்தையும், 50 மீ பட்டர்பிளை ஸ்ட்ரோக் போட்டியில் எம்.விஜயகுமார் (பெரம்பலூர்) முதலிடத்தையும், 50 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் எஸ்.ஸ்ரீதரன் (எளம்பலூர்) முதலிடத்தையும், 50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் கே.விக்னேஷ் (வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தையும், பெற்றனர்.

பெண்களுக்கான கையுந்துபந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும் பெற்றனர். கூடைப்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், கால்பந்து போட்டியில் பெரியம்மாபாளையம் கிராமத்தினர் முதலிடத்தையும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு ரொக்கப்பரிசுகளைஞம், சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராமசுப்பிரமணியராஜா, கைப்பந்து பயிற்றுநர் தே.சாந்தி, உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!