100% Government Subsidy Free Assil Breeder; Perambalur Collector V. Santha Information

Model

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ளள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகளை கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழைப்பெண் பயனாளிகளுக்கு வழங்குதல் – 2020-2021 ஆம் ஆண்டிற்கு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதையொட்டி, பெரம்பலூர் மவாட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டு கோழி அபிவிருத்தித்திட்டத்தின் மூலமாக விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழைப்பெண் பயனாளிகளுக்கு ஒன்றியத்திற்கு 400 பெண் பயனாளிகள் வீதம் 4 ஒன்றியத்திற்கு 1600 பெண் பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெறவிரும்பும் பயனாளிகள் கிராமப்புற பெண்களாகவும், கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதவராகவும் இருக்கவேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்களை சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்காணும், தகுதிகளையுடைய பயனாளிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!