100 percent subsidy for government student hostels, 50 percent subsidy for tools, equipment: Deputy Director of Horticulture Department Indira Information!
பெரம்பலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா தெரிவித்துள்ளதவாது:

பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2022-23-ம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.20 இலட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைக்க ரூ.32,000- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவியர் விடுதி ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.8,000- மதிப்பிலான பழச்செடிகள், மூலிகை செடிகள், தென்னங்கன்றுகள், காய்கறி விதைகள், தோட்டக் கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அரசு மாணவியர் விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உயர் விளைச்சல் துல்லிய பண்ணையத் திட்டத்தின்கீழ் 25 ஹெக்டேருக்கு ரூ.3 இலட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. நுண்ணீர் பாசன வசதியை பெற்றுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.15000- மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்படும். கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழில் இனத்தின்கீழ் 2 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காளான் வளர்ப்பு கூடம் அமர்த்திட 50 சதவீதம் மானியமாக ரூ.50,000- வழங்கப்படும்.

உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டத்தின்கீழ் 50 ஹெக்டேருக்கு ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000- மதிப்பீலான இடுபொருட்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

ஊடுபயிராக வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு 10 ஹெக்டேருக்கு ரூ.2 இலட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிகளுக்கு முதலாண்டிற்கு மானியத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.26,250- மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்படும். வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இடுபொருட்கள் வழங்கப்படும்.

தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் இனத்தின்கீழ் நெகிழி கூடைகள் 5 எண்களுக்கு ரூ.18,750- அலுமினிய ஏணிகள் 7 எண்களுக்கு ரூ. 70 ஆயிரம், பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக்கருவி 5 எண்களுக்கு ரூ.1,300-, கவாத்துகத்திரி 15 எண்களுக்கு ரூ.30,000-, நாப்சாக் தெளிப்பான் (8-12 லிட்டர்) 10 எண்களுக்கு ரூ.31,000- 50 சதவீதம் மானியத்தில் பயனாளிக்கு வழங்கப்படும். விசை நாப்சாக் தெளிப்பான் (12-16 லிட்டர்) 5 எண்களுக்கு ரூ.19000- ஒதுக்கீடு பெறப்பட்டு 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி அல்லது http://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!