108 ambulance workers request the Election Commission to issue a postal Vote
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பா.சுகுமாறன் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:
தமிழகம் முழுவதும் சுமார் 4ஆயிரத்து 500 பணியாளர்கள் உள்ளோம். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளி மாவட்டங்களிலும், ஆயிரத்து 500 பேர் தேர்தல் பணியிலும் ஈடுபட உள்ளோம். பொதுமக்கள் உயிர் காக்கும் சேவைத்துறை என்பதால் எங்களுக்கு தேர்தலின் போது விடுமுறை கிடையாது. ஆங்காங்கே பணியில் இருப்போம். தேர்தலில் நாங்களும், ஜனநாயக கடமையாற்ற எங்களுக்கும், தபால் முறையில் வாக்களிக்க ஆவணம் செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.