Perambalur: Three people killed in separate accidents in the Ammapalayam and Vallapuram areas!

பெரம்பலூர் அம்மாபாளையம் கிராமத்தில் நடந்த விபத்தில் டிரைவர் ஒருவர் பரிதாபமாக லாரியின் சக்கத்தில் சிக்கி உயிரிழந்தார்.
டிரைலர் லாரி ஒன்று இன்று மதியம் பெரம்பலூர் – துறையூர் சாலையில் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்ததது. அப்போது பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டியை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் திருநீலகண்டன் (58), இவர் அவரது பைக்கில் களரம்பட்டியில் இருந்து அம்மாபாளையம் நோக்கி சென்ற போது நிலைத் தடுமாறி லாரியின் இடது புறத்தில் மோதி விபத்திற்குள்ளாகி இடது பின்புற சக்கரத்தில சிக்கி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் ரூரல் போலீசார் லாரி டிரைவரான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவிரியை சேர்ந்த குருநாதன் மகன் அப்துல்லா (47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் வாலிகண்டபுரத்தை சேர்ந்த பேக்கரி ஊழியர்களான செல்வம் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த இருவரும் கிருஷ்ணகிரி மாவட்த்தை சேர்ந்தவர்கள் என்றும், வாலிகண்டபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடந்த 3 சாலை விபத்துகளில், 4 பேரும், நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் என 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497