Perambalur: Public grievance redressal meetings to be held twice a week henceforth; police announce.

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடந்தது. போலீஸ் எஸ்.பி லலித்குமார் மனுக்களை பெற்றார். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொள்கின்றனர். பெறப்பட்ட மனுக்கள் உரிய காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் இனி வரும் அனைத்து வாரங்களிலும் புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும். எனவே, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் மனுக்களை நேரில் அளித்து, இவ்வாய்ப்பை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497