Perambalur: Complaint lodged with the Collector via Facebook regarding loud music on a bus; amplifier removed.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களும், அதிக சத்தத்துடன் பாடல்களும் ஒலிபரப்புவதாக பேஸ்புக்கில் கலெக்டருக்கு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில், கலெக்டர் ஷரண்யா உத்தரவின் பேரில், மோட்டார் இன்ஸ்பெக்டர் சதாசிவம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கை செய்து, 4 தனியார் பேருந்துகளில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஆம்ளிபயர்களை உடனடியாக அங்கேயே அகற்றப்பட்டது.

மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆம்ளிபயர்களை பஸ்களில் பொருத்தக் கூடாது என்றும், இந்த விதியை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு மோட்டார் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!