Perambalur: Pedestrian struck by motorcycle; grocery store owner killed.

பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்த ஜமால்மொய்தீன் மகன் பைரோஸ் (35). இவர் இன்று அதிகாலை கடைக்கு தேவையான பொருட்கள கொள்முதல் செய்ய , குன்னத்திலிருந்து அரியலூருக்கு பைக்கில் சென்றார். அப்போது மேலமாத்தூர் அருகே பைக் சென்ற போது முன்னால் நடந்து சென்ற மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் ராமலிங்கம் (52) என்பவர் மீது பைரோஸ் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைரோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராமலிங்கம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!