Perambalur: TET exam to be held over two days starting tomorrow; 3,098 candidates to appear; Collector announces.

File Cop 2019
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் I – தேர்வானது பெரம்பலூர் ஒன்றியத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ளது. இதி 644 தேர்வர்களும், நாளை மறுநாள் 05.07.2026 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II– தேர்வானது பெரம்பலூர் ஒன்றியத்தில் 9 மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 2454 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் Toll free Telephone No. 1800 425 6753 என்ற எண்ணில் தேர்வர்கள் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே, தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் சென்றடைய வேண்டும். தேர்வர்களுக்கு தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் போக்குவரத்துத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497