Perambalur: A free medical camp for kidney stones and abdominal pain is being held at Arputha Hospital until July 31! Dr. Samuel Devakumar shares the information.

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள அற்புதா மருத்துவமனையில் ஜுலை.31 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை சிறுநீரக கற்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் மற்றும் வயிற்று வலிக்கான இலவச மருத்துவ முகாம் நடந்து வருவதாக மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சாமுவேல் தேவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது: பெரம்பலூரில் கடந்த 22 வருடங்களாக மருத்துவ சேவை செய்து வரும் அற்புதா மருத்துவமனை மக்களுடன் மக்களாக சேவை செய்து வருகிறது.
சிறுநீரக கற்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாமில், சிறுநீரக கற்கள், சிறுநீர் குழாய் கற்கள், நீர்ப்பை கற்கள், நீர்த்தாரையில் அடைப்பு, தசை வளர்ச்சி ஆகியவற்றிற்கு சிகிச்சை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அல்லைப் பகுதியில் இருந்து அடிவயிறு வரை வலி இருந்தாலோ, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி அல்லது ரத்தம் வெளியேறுதல், இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் சிறப்பு சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருத்துவர் ஆலோசனைகள், ரத்தப்பரிசோதனை, எக்ஸ்-ரே, ஸ்கேன் ஆகியவை 50 சதவீதம் சலுகை செய்யப்படும் என்றும்,
வயிறே நலமா! என்ற பெயரில் நடக்கும் இம்முகாமில், வயிற்று வலி, சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்தல் அல்லது உணர்வு, வயிறு உப்புசம், கொஞ்சம் சாப்பிட்டவுடன் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு, வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, உணவு விழுங்குவதில் அடைப்பு, ரத்த வாந்தி, நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், உணவு குழாய் அடைப்பிற்கான சிகிச்சை, வயிற்றுப் புண், சிறுகுடல் புண், இரைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை, கணைய உறுப்பின் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, பித்தப்பை கற்கள் சிகிச்சை, பித்த நீர்ப்பாதை கற்களுக்கான சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளும் அளிக்கப்படுதாகவும், மேலும், முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருத்துவர் ஆலோசனைகள், ரத்தப்பரிசோதனை, எக்ஸ்-ரே, ஸ்கேன் மற்றும் என்டோஸ்கோப்பி ஆகியவை 50 சதவீத சலுகையில் செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர், பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார். முன்பதிவிற்கு, அற்புதா மருத்துவமனைக்கு நேரிலோ அல்லது 99948 98026, 88704 71932 88704 71934 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497